நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம் - பென் ஸ்டோக்ஸ்
எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

India vs England Lord’s Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றிபெற முயற்சிப்போம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இது எப்போதும் ஒரு சிறந்த தொடராகவே இருக்கும். ஏனெனில் இதில் தருணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு சிறந்த அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் முடிவுகள் எப்போது மாறிக்கொண்டே இருக்கும். ஹெடிங்லேவில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், பர்மிங்ஹாமில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
இரண்டு நல்ல அணிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போராடும்போது, நீங்கள் இதைக் காண்பீர்கள். அதனால் எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி. இந்த வாரம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை அழுத்தத்தில் தள்ள முயற்சிப்போம். வெளிப்படையாக கூற வேண்டும் எனில் நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்
முன்னதாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங்கிற்கு பதிலாக நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஷோயப் பஷீருக்கு பதில் கஸ் அட்கிசனும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Win Big, Make Your Cricket Tales Now