லார்ட்ஸ் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
37ஆவது டெஸ்ட் சதம்
இந்த போட்டியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், ஜேக்ஸ் காலிஸ் இரண்டாம் இடத்திலும், ரிக்கி பாண்டிங் மூன்றாம் இடத்திலும், குமார் சங்கக்காரா 4ஆம் இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
- 51 - சச்சின் டெண்டுல்கர் (329 இன்னிங்ஸ்)
- 45 - ஜாக் காலிஸ் (280 இன்னிங்ஸ்)
- 41 - ரிக்கி பாண்டிங் (287 இன்னிங்ஸ்)
- 38 - குமார் சங்கக்காரா (233 இன்னிங்ஸ்)
- 37* - ஜோ ரூட் (284 இன்னிங்ஸ்)
- 36 - ஸ்டீவ் ஸ்மித் (210 இன்னிங்ஸ்)
இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் விளாசும் 11ஆவது சதமாகவும் இது அமைந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் ஜோ ரூட் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 11 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் அதனை ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
- 11* - ஜோ ரூட் (60 இன்னிங்ஸ்)
- 11 - ஸ்டீவ் ஸ்மித் (46 இன்னிங்ஸ்)
- 8 - கேரி சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்)
- 8 - விவ் ரிச்சர்ட்ஸ் (41 இன்னிங்ஸ்)
- 8 - ரிக்கி பாண்டிங் (51 இன்னிங்ஸ்)
ஒரு மைதானத்தில் அதிக சதங்கள்
கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜோ ரூட் விளாசும் 8ஆவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு மைதானத்தில் அதிக சதங்களை விளாசிய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் 11 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மைதானத்தில் அதிக சதங்கள்
- 11 - மஹேல ஜெயவர்தன, கொழும்பு
- 9 - டான் பிராட்மேன், மெல்போர்ஜ்
- 9 - ஜாக் காலிஸ், கேப் டவுன்
- 8 - குமார் சங்கக்கார, கொழும்பு
- 8* - ஜோ ரூட், லார்ட்ஸ்
சொந்த ஊரில் அதிக சதங்கள்
இதுதவிர்த்து சொந்த மைதானங்களில் அதிக சதங்களை விளாசிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே, தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், ஆஸ்திரேலியாவின் நிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 23 சதங்களுடன் முதலிட்த்திலும், இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் தலா 22 சதங்களுடன் இரண்டாம் இடத்தையும் பகிர்ந்துள்ளனர்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
- 23 - மஹேல ஜெயவர்த்தனே, இலங்கை
- 23 - ஜாக் காலிஸ், தென்னாப்பிரிக்கா
- 23 - ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா
- 22 - குமார் சங்கக்கார, இலங்கை
- 22* - ஜோ ரூட், இங்கிலாந்து
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் சதமடித்து அசத்தி இருந்த ஜோ ரூட் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்துள்ள ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் அணி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now