Advertisement

விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!  

விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது. 

Advertisement
Eoin Morgan feels Virat Kohli's captaincy is a big miss in Test cricket!
Eoin Morgan feels Virat Kohli's captaincy is a big miss in Test cricket! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 12, 2023 • 10:39 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பில் தொடங்கி, பிளேயிங் லெவன் தேர்வு செய்தது மற்றும் டாஸ் வென்றப்பின் எடுத்த தவறான முடிவுகள் என அடுக்கடுக்காக இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டு வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 12, 2023 • 10:39 PM

மேலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் போதிய ஆக்ரோஷம் இல்லை. இது எதிரணியை எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்தில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆக்ரோஷமான கேப்டன் பொறுப்பை வெளிப்படுத்தினார். அப்போதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை இந்திய அணி வந்தது. ஆனால் முதல் அணியாக உள்ளே வந்தது.

Trending

இம்முறை ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் தட்டுதடுமாறி வந்தது. மேலும் பெரும்பாலான தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பே வகிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் என இரண்டு முக்கியமான தொடர்களில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த சமயத்தில் ரகானே கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை பற்றி மற்றவர்கள் பேசி வரும் சூழலில் விராட் கோலி கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் மார்கன். 

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி வெளிப்படுத்திய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப்பை ஒட்டுமொத்த கிரிக்கெட்டுமே மிஸ் செய்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும் பேரார்வமும் விராட் கோலி கொண்டிருந்தார். அவருக்கு பிடித்த கிரிக்கெட் ஃபார்மட் டெஸ்ட் தான் என்று பலமுறை தெரிவித்திருக்கிறார். அதை அவரது கேப்டன் பொறுப்பிலும் வெளிப்படுத்தினார். தனிப்பட்ட பேட்டிங்கிலும் வெளிப்படுத்தினார். இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் அவரது கேப்டன் பொறுப்பை மிஸ் செய்வது தெரிகிறது.

மேலும், இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஸ்டோக்ஸ் அப்படிப்பட்ட ஒருத்தர் தான். தனிப்பட்ட முறையில் மொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டு அணியை வழிநடத்திச் செல்வார். அவர் கேப்டனாக இல்லாத போதும் இதை செய்து காட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டவராக ஸ்டோக்ஸ் இருக்கிறார். இங்கிலாந்து அணியை வரும் காலங்களில் மிக சிறப்பாக வழி நடத்துவார் என்று அவரை பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement