
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலங்கா துணைக்கேப்டனாவுக் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடர்களில் விளையாடமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியதுடன், டி20 அணிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இன்று இத்தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிகப்பட்டுள்ளன. இதில் ஒருநாள் அணிக்கு கிரேய்க் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ரிஸாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக சீன் வில்லியம்ஸ் இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.