
Ex-England Batter Gary Ballance In Zimbabwe Squad For Windies Tests (Image Source: Google)
கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு போட்டிகளுமே புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக 37 வயதான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் வழக்கமான கேப்டன் சீன் வில்லியம்ஸ் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.