Advertisement

இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 23, 2024 • 09:12 AM

நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 23, 2024 • 09:12 AM

நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள இத்தொடரானது எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால், வநிந்து ஹசரங்கா, மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷ்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

Trending

இந்நிலையில் இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் இளம் அதிரடி வீரர் பெவோன் ஜேக்கப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெவோன் ஜேக்கப்ஸ், இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இதுதவிர்த்து கேன் வில்லியம்சன், டெவான் கான்வே உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடமளிக்கப்படவில்லை. இதில் ஜேக்ஸ், ஸாக் ஃபோல்க்ஸ், டிம் ராபின்சன் உள்ளிட்டோர் டி20 அணியில் மட்டும் இடம்பிடித்துள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டாம் லேதம், வில்லியம் ஓ ரூர்க் மற்றும் வில் யங் உள்ளிட்டோருக்கு ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, சாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், நாதன் ஸ்மித்

நியூசிலாந்து ஒருநாள் அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மாட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங்.

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை டி20 அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க அபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, மதீஷ பத்திரன, நுவான் துஷார, அசித்த ஃபெர்னாண்டோ, பினுர ஃபெர்னாண்டோ

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement