
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடரானது இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கொண்டு இதில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் ஏற்கெனவே இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் மூன்றாவது முறையாகவும் இத்தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. அதேசமயம் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது.
இதனால் இந்த தொடர் தொடங்க சில மாதங்கள் உள்ள நிலையிலேயே அந்த அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனும் இணைந்துள்ளார். இத்தொடர் குறித்து பேசியுள்ள நாதன் லையன், “கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது.