
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் வர்லாற்று சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.
மேற்கொண்டு சமீபத்தில்ந் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தார். மேலும் அப்போட்டியில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதுமட்டுமின்றி அப்போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுமுறையின் காரணமாக பலாரால் பாராட்டப்பட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர் இடையிலான மோதல் என்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.