
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
நேற்று திருவனந்தபுரம் வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் முதல் டி20 போட்டிக்கு சினிமா நட்சத்திரங்களையும் மிஞ்சும் அளவுக்கு கேரள ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் தான் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இங்கு கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.