
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் சித்தார்த் கௌல். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சித்தார்த் கௌல் தலா 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 22அம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து 88 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள சித்தார்த் கௌல் 297 விக்கெட்டுகளையும், 111 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளையும், 145 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையடியுள்ளார். அதிலும் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் அணியின் தவிர்க்க முடியத பந்துவீச்சாளராகவும் இருந்தார். அதனைத்தவிர்த்து கடந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப் அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.