
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் இலங்கையில் தற்பொழுது நடந்து வருகிறது. இப்போட்டியில் டா வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தீர்மானித்தார். இந்திய அணியில் அக்சர், சர்துல் இடத்தில் இடம் பெற்றார்.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளேவை மிகச் சிறப்பாக பயன்படுத்தி ரன்கள் சேர்த்தார்கள். இந்த முறை கில் பொறுமைக்காட்ட ரோஹித் சர்மா அதிரடியில் ஈடுபட்டார். அதன்பின் ஆட்டத்தின் 11 வது ஓவரை இலங்கையின் 20 வயதான இடதுகை இளம் சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலையே கில் போல்ட்டாகி வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா என ஐந்து இந்திய முக்கிய பேட்ஸ்மேன்களை அவர் வெளியேற்றினார். இதனால் இந்திய அணி பெரிய சரிவுக்கு உள்ளானது. இதற்கடுத்து பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் அசலங்காவை இலங்கை கேப்டன் சனகா கொண்டு வந்தார்.அவர் தன் பங்குக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.