
இந்திய அணி இன்னும் சில நாள்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மேற்கொண்டு அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது ஹர்திக் பாண்டியாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், “ஹார்திக் பாண்டியா எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர் என்பதை உலகக் கோப்பையிலேயே நாம் பார்த்திருக்கிறோம். எங்களுக்கு அவர் தேவை என்றாலும், அவரின் உடற்தகுதி பெரும் சவாலாக உள்ளது. அனைத்து சூழல்களிலும் விளையாடக் கூடிய கேப்டன் தான் தற்போது இந்திய அணிக்கு தேவை.