குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்வ்ஸால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி டிம் சௌதீ பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ள்ள ஷுப்மான் கில் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது.
இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 243 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது குறித்து பேசிய வாஷிங்டன் சுந்தர், “நான் எந்த சூழ்நிலையில் பந்து வீசினாலும் அல்லது எந்த பேட்ஸ்மேனை எதிர்கொண்டாலும் மிகவும் துல்லியமாக இருக்க விரும்பினேன். இது கடவுளின் திட்டம், அது நன்றாக முடிந்தது. நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இப்போட்டிக்கான மைதானத்தில் பந்து முதல் நாளிலிருந்தே சுழலத் தொடங்கும் என்று எங்களுக்கு தெரியும். அதன்படியே முதல் செஷனில் பந்து சுழலத்தொடங்கியது. மேற்கொண்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது செஷன்களில் அது இன்னும் அதிகமாக திரும்பியது. மேலும் தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் இந்த டெஸ்ட் போட்டிக்கு என்னை தேர்வு செய்ததுடன், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்த கேப்டன் பயிற்சியாளருக்கு எனது நன்றியை தெரிவிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now