Advertisement

ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 08, 2023 • 13:55 PM
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்! (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக பணிபுரிகிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு வந்ததுடன் முதல் முறையே சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல், “ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.

Trending


இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன் என்று பார்த்திவ் பட்டேல் கூறியிருக்கிறார். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சில சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement