
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தம்முடைய 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 12 பந்தில் 50 ரன்கள் கடந்து காலத்தால் அழிக்க முடியாத உலக சாதனைகளை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை விட 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
குறிப்பாக அந்த உலகக் கோப்பையில் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காக விளையாடி அவர் புற்றுநோயிலிருந்தும் போராடி குணமடைந்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த வகையில் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனுக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் பார்ட்டியில் ஈடுபட்டு பொறுப்பின்றி இருந்த தம்மிடம் யுவராஜ் கொடுத்த உத்வேகமான வார்த்தைகளும் ஆலோசனைகளும் தான் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு உதவியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு முறை பெங்களூருவில் நடைபெற்ற கேஎஸ்சிஏ கோப்பையில் நான் விளையாடினேன். அதில் நான் இந்தியன் ஏர்லைன்ஸ் அணிக்காக விளையாடினேன். அது இறுதுப்போட்டி என்பதால் யுவராஜ் மற்றும் லக்ஷ்மண் பாய் ஆகியோரும் விளையாடினார்கள்.