ஒருநாள் & டெஸ்டில் சூர்யாவின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக தனது முத்திரையை பதித்துள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்பாடுகள் வெளிவரவில்லை. இதனால் அவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், அவர் தற்சமயம் இந்தியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாட சூர்யகுமார் யாதவ் முடிவுசெய்துள்ளார். முன்னதாக இத்தொடருக்கான மும்பை அணியில் அவர் முதலில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் தாமாக முன்வந்து இத்தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Trending
இந்நிலையில், சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேரியர் கிட்டத்திட்ட முடிவுக்கு வந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துள்ளதாக நான் நினைக்கிறேன்.
இப்போது கிரிக்கெட் அதிகம் இல்லை. சூர்யகுமார் யாதவை அணியில் வைத்திருப்பதில்லை என்று தேர்வாளர்களும், அணி நிர்வாகமும் இப்போதுதான் முடிவு செய்திருப்பதாக நினைக்கிறேன். அவர் அப்படித்தான், சூர்யகுமார் யாதவை டி20 ஸ்பெஷலிஸ்டாக மட்டுமே அவர்கள் கருதுகின்றனர். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு இல்லை. மேற்கொண்டு டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் நிறைய வீரர்கள் உள்ளனர். அதனால் அதற்கான போட்டியும் அதிகமாக உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்காது. மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் இனிவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருக்க மட்டார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இதுவரை 71 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 20 அரைசதங்களுடன் 2,432 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 773 ரன்களையும், ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 8 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now