விராட் கோலியை சச்சினுடன் ஒப்பீடாதீர்கள் - கௌதம் கம்பீர்!
லங்கை இன்றைய ஆட்டத்தில் மோசமாக பந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினுடன் விராட் கோலியை ஓப்பிட்டு பேச கூடாது என்றும் இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தனது 45 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சச்சினுக்கும் அவருக்கும் வெறும் 4 சதம் தான் இடைவெளியில் இருக்கிறது. மேலும் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 45 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள கம்பீர் இலங்கை இன்றைய ஆட்டத்தில் மோசமாக பந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினுடன் விராட் கோலியை ஓப்பிட்டு பேச கூடாது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இலங்கை பந்துவீச்சு மிகவும் சாதாரணமாக இருந்தது. இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்கள்.குறிப்பாக விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த இலங்கை அணி எந்த முயற்சியும் செய்யவில்லை. இது எனக்கு நிச்சயம் ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் இலங்கை வீரர்கள் பந்து வீசவே இல்லை. நிச்சயம் எனக்கு இது ஏமாற்றத்தை அளிக்கிறது.
விராட் கோலி இன்று 45ஆவது சதத்தை விளாசி இருக்கிறார். ஆனால் சச்சின் உடன் விராட் கோலி அடிக்கும் சதங்களை ஒப்பிட முடியாது. ஏனென்றால் இரண்டுமே வெவ்வேறு காலம். சச்சின் விளையாடும் போது 30 மீட்டர் உள் வட்டத்தில் ஐந்து வீரர்கள் இருக்க மாட்டார்கள் இதனால் இருவரையும் ஒப்பிடக்கூடாது” என்று கூறியுள்ளார் .கம்பீரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now