
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கொண்டு அக்காணொளியை பதிவிட்ட நபர் தனது பதிவில் , “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி சமீப காலமாக உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதயப் பிரச்சினைகள் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலக் கவலைகள் காரணமாக அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து அவருக்குத் தேவையான ஆதரவைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.