
Former Sri Lanka Test Player Nuwan Zoysa Gets Six-Year Ban For Match-Fixing (Image Source: Google)
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவன் சோய்சா. இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்டு ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு நுவன் சோய்சா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் விசாரணை முடியும் வரை சோய்சா சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுவன் சோய்சா மீதான குற்றச்சாட்டை அவரே ஒப்புக்கொண்டுள்ளதால், அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டுள்ளது.