Advertisement

மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய அணி சாதனைகள் குறைவாக படைத்துள்ள அணி எனக் கூறிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 07, 2024 • 23:02 PM
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி பல சாதனைகள் படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சாதனைகள் குறைவாக படைத்திருக்கின்றனர். குறிப்பாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணி குறைவான சாதனைகளையே படைத்துள்ளது எனப் பேசினார். 

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்  மைக்கேல் வாகனின் கருத்துக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்கப் பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “நாங்கள் சில ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் போட்டிகளில் கோப்பையை வெல்லவில்லை. ஆனால், அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அணிகளில் இந்திய அணியே சிறந்த அணி. நாங்கள் வெளிநாடுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். 

Trending


அதிலும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். மைக்கேல் வாகனின் இந்தியாவின் சாதனை தொடர்பான கருத்துக்குப் பிறகு இந்தியாவில் பலர் இந்திய அணி குறைவான சாதனைகளை படைத்துள்ள அணியா என ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், இது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியிலிருந்து இந்திய அணியின் தோல்வியிலிருந்து வலிமையாக மீண்டும் வரும் திறன் வெளிப்பட்டது. 

எப்படிப்பட்ட சூழலில் இருந்தும் மீண்டுவரும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். அதனை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியிலிருந்து மீண்டு வருவது சாத்தியம். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாகப் பாருங்கள். கிரிக்கெட் இன்னும் விளையாட்டாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement