1-lg1-mdl.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், ஆடம் ஸாம்பா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து ஜோஷ் இங்கிலிஸ், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம்பிடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பயணிக்கு ஆஸ்திரேலிய அணியின் ரிஸர்வ் வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.