
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி 'ஒயிட்வாஷ்' செய்தது. ஹராரேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது.
3ஆவது வீரராக களம் இறங்கிய சுப்மன்கில் 97 பந்தில் 130 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். அவர் ஜிம்பாப்வேயில் அதிக ரன் எடுத்து தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். இஷான்கிஷன் 50 ரன்னும், ஷிகர் தவான் 40 ரன்னும், எடுத்தனர். இவான்ஸ் 5 விக்கெட்டும், விக்டர், லுகே ஜான்வே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியை விட இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரரகள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அணி போராடியே தோற்றது.