
Oval Test: ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதையடுத்து இன்றைய தினம் இந்திய அணி வீரர்கள் ஓவல் மைதானத்தில் தங்களது பயிற்சியைத் தொடங்கினர். அப்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டடனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்திய அணி பயிற்சிக்காக ஈரமான ஆடுகளம் வழங்கப்பட்டதாகவும், அதனால் மாற்று பிட்சை ஏற்பாடு செய்ய கோரிய நிலையில் ஃபோர்டிஸ் அதனை மறுத்தாகவும் கூறப்படுகிறது.