Advertisement

இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்! 

இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Advertisement
இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்! 
இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்!  (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 13, 2023 • 02:20 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் நேற்று இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மல்லுகட்டின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 13, 2023 • 02:20 PM

அதன்படி ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Trending

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதற்கு முந்தைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி இந்திய அணியினருக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். பேட்டிங் யூனிட் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. காயத்திற்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா திரும்பி வருவதில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் மீண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 214 ரன்கள் இலக்கை கொண்டு சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் இலங்கை போன்ற அணிக்கு எதிரான வெற்றி அணிக்கு நம்பிக்கையை அளிக்கும் . இது அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் உலகக்கோப்பைக்கும் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஜஸ்பிரித் பும்ராவும், குல்தீப் யாதவும் சிறப்பாக செயல்பட தொடங்கும் தருணம் கேப்டனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement