
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட இவர், தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நிகமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். அதன்படி, அவர் தேர்வுசெய்துள்ள அணியின் தொடக்க வீரராக தன்னை நியமித்துக்கொண்டுள்ள கம்பீர், மற்றொரு தொடக்க வீரராக ராபின் உத்தப்பாவை நியமித்துள்ளார். மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசை வீரராக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதானையும், வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோருடன், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸையும் தேர்வு செய்துள்ளார். இதன் பிறகு, தனது அணியின் பந்துவீச்சாளர்களாக தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, இந்திய அணியின் பியூஷ் சாவ்லா உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்துள்ளார்.