இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது.
மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேற்கொண்டு விவிஎஸ் லக்ஷ்மன், கௌதம் கம்பீர், ஸ்டீஃபன் பிளெமிங் போன்றவர்களிடமும் பிசிசிஐ ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
Trending
மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளின் ஆலோசகராக கலக்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை இந்திய அடுத்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான. அதேசமயம் கௌதம் கம்பீரின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என்ற தகவல்களும் வந்துள்ளன.
Gautam Gambhir Set To Replace Rahul Dravid As India Head Coach!#IPL2024 #KKR #India #TeamIndia #T20WorldCup pic.twitter.com/M98oUWXaOn
— CRICKETNMORE (@cricketnmore) June 1, 2024
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர், அணியை மீண்டும் சாம்பியனாக்கி அசத்தியுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில் கம்பீருக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வீரராக விளையாடிய கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now