
ஆஸ்திரெலிய மகளிர் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய, டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளுல் வெலிங்டனில் உள்ள பெசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.