Advertisement

அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!

விருது வழங்கும் விழாவில் மோடியிடம் கை கொடுத்த பட் கம்மின்ஸ் கோப்பையுடன் காத்திருந்த காணொளியை பார்ப்பது தற்போது வேடிக்கையாக இருந்தது. அது 10 நிமிடங்கள் வரை தாமதமாக இருந்தது போன்ற உணர்வை கொடுத்தது என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2023 • 12:04 PM
அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!
அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பை வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார்.

இறுதியில் சொன்னதை செய்து காட்டிய அவர் உலகக் கோப்பையை வென்ற 5வது ஆஸ்திரேலியா கேப்டன் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். அதை விட இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தோல்வியை பார்த்து விட்டு கடைசியில் விருது வழங்கும் விழாவில் வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கம்மின்ஸிடம் கொடுத்தார். அத்துடன் கோப்பையை கொடுத்த பின் அங்கிருந்து வெளியேறிய அவர் மேடையின் கீழே நின்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரிடமும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Trending


அதன் காரணமாக மேடையில் வெற்றியை கொண்டாடுவதற்காக கோப்பையுடன் தயாராக இருந்த பட் கம்மின்ஸ் சில நிமிடங்கள் தம்முடைய அணியினர் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் அந்த சமயத்தில் 10 நிமிடம் தாமதமாக இருந்ததைப் போல் உணரும் அளவுக்கு பிரதமர் மோடி மெதுவாக வாழ்த்து தெரிவித்ததாக கிளன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இருப்பினும் அப்போது பொறுமையாக இருந்து அந்த சூழ்நிலையை கம்மின்ஸ் சிறப்பாக கையாண்டதாக பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “விருது வழங்கும் விழாவில் மோடியிடம் கை கொடுத்த பட் கம்மின்ஸ் கோப்பையுடன் காத்திருந்த காணொளியை பார்ப்பது தற்போது வேடிக்கையாக இருந்தது. அது 10 நிமிடங்கள் வரை தாமதமாக இருந்தது போன்ற உணர்வை கொடுத்தது. அப்போது கம்மின்ஸ் கோப்பையுடன் நாங்கள் வருவதற்காக சில நேரங்கள் காத்திருந்தார். அந்த சூழ்நிலைகளை அவர் மிகவும் சாமர்த்தியமாக கையாண்டார். குறிப்பாக எது நடந்தாலும் நான் மரியாதையுடன் காத்திருக்கிறேன் என்பது போல் அவர் இருந்தார். அனைவராலும் இது போன்ற பண்பை காட்ட முடியாது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement