
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் மோசமாக விளையாடியுள்ளார்கள். மேலும் 3 வருடங்கள் கழித்து முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவின் ஷெஃப்ஃபீல்ட் ஷீல்ட் போட்டிக்கான விக்டோரியா அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், மெல்போர்னில் நடைபெற்று வரும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்தார். நண்பருடைய பிறந்த நாள் விழாவில் காலில் காயம் ஏற்பட்டதால் கடந்த நவம்பர் முதல் எந்தவொரு ஆட்டத்திலும் விளையாடாமல் இருந்தார். தற்போது முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.