
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 56 பந்தில் சதம் அடித்து தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். இந்த வருடம் அவருக்கு மிகவும் சிறப்பான ஒரு வருடமாக இருந்து வருகிறது. இந்திய மண்ணில் சதம் அடித்தார். அடுத்து ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்தார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்தார். தற்பொழுது ஐபிஎல் தொடரிலும் தனது சதத்தை அடித்திருக்கிறார்.
இவர் பெரிய அளவில் சாதிக்காத பொழுதே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இவர் பயிற்சி செய்யும் விதத்தை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார். தற்பொழுது கில் நேற்று சதம் அடித்த பிறகு விராட் கோலி மிக முக்கியமான செய்தி ஒன்றை அவருக்காக வெளியிட்டு இருக்கிறார்.