இப்போட்டி நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது - பாட் கம்மின்ஸ்!
இது ஒரு அற்புதமான போட்டி ஆனால் நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள்யும், நசீம் ஷா 40 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.
Trending
அதன் பின்னர் 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோஷ் இங்கில்ஸ் 49 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பட் கம்மின்ஸ் 32 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ், “இன்றை போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். இது ஒரு அற்புதமான போட்டி ஆனால் நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது. எங்கள் அணி பந்துவீச்சாளர் பந்துவீசிய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஸ்டார்க் தொடக்கத்தில் அபாயகரமாக இருந்தார். அவருட்ன் இணைந்து மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் 8 பந்துவீச்சாளர்களை முயற்சித்ததை சுவாரஸ்யமாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். மார்னஸ் லபுஷாக்னே எப்போதும் எங்கள் அணியின் ஒரு அங்கமாக இருப்பார். அதனால் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதுடன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இது ஒரு ஒருநாள் போட்டி மற்றும் நிபந்தனைகளுடன், எங்காளுக்கு ஏராளமான ஆல்ரவுண்டர்கள் கிடைத்துள்ளனர், அவர்களையும் பயன்படுத்தலாம்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் முக்கால்வாசிக்கு மேல் நாங்கள் மிகவும் நன்றாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்வரும் போட்டிகளில் வீரர்கள் சில பார்ட்னர்ஷிப்களை அமைப்பதுடான், ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். சில சமயங்களில் அது வேலை செய்யாமல் போகலாம், ஆனால் இன்னும் சில பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் முயற்சியை கண்டுபிடிக்க அது உதவலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now