
நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூஸி பேட்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டுவைன், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்ற பிறகு, மூத்த ஆல்ரவுண்டர் சோஃபி டெவின், பரபரப்பான கிரிக்கெட் அட்டவணை எதிர்பார்த்ததை விட தன்னை மிகவும் கடுமையாக பாதித்ததாகவும், விளையாட்டிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலையை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் டபிள்யூபிஎல் தொடரில் இருந்தும் சோஃபி டிவைன் விலகி இருந்தது குறிப்பிடத்தக்காது.