அஸ்வின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!
செய்தியாளர் சந்திப்புக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் கடைசி நேரத்தில் தான் அஸ்வினின் ஓய்வு பற்றி நான் அறிந்தேன் என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொட்ரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் நீடித்து வருகின்றன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26அம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற கபா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Trending
தற்சமயம் இதுகுறித்து பேசியுள்ள இந்திய வீர்ர் ரவீந்திர ஜடேஜா, “செய்தியாளர் சந்திப்புக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் கடைசி நேரத்தில் தான் அஸ்வினின் ஓய்வு பற்றி நான் அறிந்தேன். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அன்றைய தினமும் நாங்கள் ஒன்றாகக் கழித்தோம், அப்படி இருந்தும் அவர் ஓய்வு பெறுவது எனக்கு ஒரு குறிப்பைக் கூட கொடுக்கவில்லை. அஸ்வினின் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நாங்கள் பல ஆண்டுகளாக இந்திய அணியின் பந்துவீச்சு பங்காளிகளாக இருந்து வந்துள்ளோம். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். மேலும் ஒவ்வொரு முறையும் பேட்டர்களுக்கு எதிராக நாங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளதால் நான் பல விஷயங்களை இழக்கிறேன். சுழற்பந்து வீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் சிறந்த ஒருவர் அஸ்வினுக்கு பதிலாக வருவார் என்று நம்புகிறேன்.
இந்தியாவில், எங்களிடம் எப்போதும் நல்ல திறமை இருக்கிறது, அதனால் நாங்கள் யாராலும் ஈடுசெய்ய முடியாதவர்கள் இல்லை. எந்தவொரு இளைஞருக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கும் முத்திரையைப் பதிப்பதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். சார்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணியாக அஸ்வின் மற்றும் ஜடேஜா பல போட்டிகளில் முத்திரைப் படைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இவர்கள் இருவரும் இணைந்த இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக விளையாடி 587 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் கூட்டணியின் சாதனையையும் முறியடித்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 501 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அதனை அஸ்வின் - ஜடேஜா கூட்டணி முறியடித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now