தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் அந்தக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவோம் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
![Graeme Smiths Belief South Africa Can Win Icc Trophy This Year தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/biggest-challenge-for-south-africa-will-come-from-indias-great-bowling-assets-graeme-smith-mdl.jpg)
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
Trending
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்லும் என்று அந்த அணியின் முன்னால் கேப்டன் கிரேம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த அந்தக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நம்புகிறோம். அதேசமயம் சொந்த ரசிகர்கள் முன்னால் ஐசிசி உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்க அணி வென்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாங்கள், எங்கள் மைதானங்கள், பிட்ச்கள் மற்றும் எங்கள் கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறோம். இதன்மூலம் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் நாங்கள் சிறந்த அணியாக இருப்பதை அது உறுதிசெய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now