
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது.
அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தா. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மே மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி வென்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய குடகேஷ் மோட்டி, அத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவருக்கு அத்தொடரின் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,