
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் இன்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீராங்கனைகளாக யஷ்திகா பாட்டியா - ஹீலி மேத்யூஸ் இணை களமிறங்கியனர். இதில் யஷ்திகா பாட்டியா ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹீலி மேத்யூஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூஸ் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.