
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டாஸ் கிரிக்கெட் மிதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த நிலையில், அதில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் சென்றுள்ளனர்.
இதனையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை வியாழக்கிழமை அழைத்து அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்கள் அனைவரையும், பிரதமர் அல்பானீஸிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொறுப்பு கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி இருவருக்கும் பிரதமர் அல்பானீஸ் வாழ்த்து தெரிவித்தார்