ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது ஏன்? காணரத்தை கூறிய ஜேசன் ராய்!
கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் அதிரடி வீரர் ஜேசன் ராய், ஏன் இந்தாண்டு ஐபிஎல்தொடரிலிருந்து விலகினேன் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்ட வருகிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் தற்போது 25 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றனா. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 15 சிக்ஸர்கள் விளாசப்பட்டு வருவது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தான் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பேட்டர்கள் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜேசன் ராய் தொடரிலிருந்து விலகினார்.
Trending
கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் இந்த சீசனில் அவர் தனிப்பட்ட கரணங்களினால் இத்தொடரிலிருந்து விலகியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மாற்றாக பில் சால்ட்டை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜேசன் ராய், “இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது எனது மிகப்பெரும் முடிவாகும். ஏனெனில் கேகேஆர் அணி என்மீது நம்பிக்கை வைத்து என்னை தக்கவைத்ததுடன், எனக்காக பெரிய செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் நான் அவர்களுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் இத்தொடரிலிருந்து விலகுவது மிகப்பெரும் முடிவாகும்.
அதுமட்டுமின்றி எனது மகளின் 5ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி இருந்ததன் காரணமாக என்னால் முதலில் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியாமல் போனது. ஆனால் இந்தாண்டு முழுவதும் நான் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடியதன் காரணமாக நான் மிகவும் சோர்வாக இருந்தேன். மேலும் நான் சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டேன், அதனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் லீக் போட்டிகளில் அதிகபடியாக விளையாடி வந்தேன்.
அதனால் நான் கேகேஆர் அணிக்கு மிகவும் நேர்மையாக இருந்தேன், எங்களுக்கு ஒரு அருமையான உறவு உள்ளது, அதனால் நான் ஏன் வரவில்லை என்பது குறித்து எங்களால் ஒரு உடன்பாட்டிற்கு வர முடிந்தது. அவர்கள் முழுமையாக புரிந்துகொண்டார்கள், அதற்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் நான் என்னை முதன்மைப்படுத்த வேண்டியிருந்தது, எனது மனநிலைக்கும், உடல் நிலைக்கு இந்த ஓய்வானது தேவை" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now