
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஒரு அளவுக்கு ஆஸ்திரேலியா அணியில் தாக்குப் பிடித்த வீரர் என்றால் அது பீட்டர் ஹான்ஸ்கோம்ப் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பீட்டர் ஹான்ஸ்கோம்ப், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சதம் வளாசினார்.
இதனால், அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் தேர்வுக்குழுவினர்களும் அவரை ஓரங்கட்ட தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க தனது இரண்டாவது சுற்று பயணமாக பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் இன்னிங்சில் 72 ரன்கள் சேர்த்தார்.
எனினும் இரண்டாவது இன்னிங்சில் சொதப்பினார். இது குறித்து பேசிய அவர், “சுழற் பந்துவீச்சை ரஹானே விடமிருந்து தான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தாம் கற்றுக் கொண்டேன். ரஹானே சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடினார் என்பதை பார்த்து தமக்கு ஆச்சரியமாக இருந்தது.