
நேற்று மும்பை மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஹென்றி கிளாசன் மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளி விட்டார்கள்.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியை தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் அதிரடியாக 170 ரன்களுக்கு சுருட்டி விட்டார்கள். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. நேற்றைய படுதோல்வி இங்கிலாந்து அணிக்கான இந்த உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை மிகவும் மங்கலாக்க செய்திருக்கிறது.
இனி அவர்கள் எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டும் மேலும் நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் கடுமையாகவும் தாக்கி பேசி இருக்கிறார்.