 
                                                    ENG vs IND Test Series: உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த கருண் நாயரிடமிருந்து சர்ஃபராஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார்.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள்து.
அதேநேரத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் படேல், ஹர்ஷித் ரானா, சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சர்ஃப்ராஸ் மற்றும் ஹர்ஷித் ரானா இருவரும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் அபாரமாக செயல்பட்டு ரன்களைக் குவித்தார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        