சுப்மன் கில் போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியம் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இத்தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. முன்னதாக, இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் அவர் பல ஆச்சரியமான முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மான் கில்லையும் அணியில் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து அவர் அணியின் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பந்தை தேர்வு செய்யலாம் என்றும், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பந்துவீச்சாளர்களாகவும் தேர்வு செய்திருந்தார். ஆனால் ஷுப்மன் கில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஹர்பஜன் சிங், சுப்மன் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டி20 என்பது வெறும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளின் விளையாட்டு அல்ல. சுப்மான் கில் பேட்டிங் செய்ய வரும்போது, அவர் யாருடனும் போட்டியிட முடியும். அவரது பேட்டிங் அடிப்படைகள் மிகவும் வலுவானவை, அவரால் எந்த வடிவத்திலும் ரன்கள் எடுக்க முடியும்
மேலும் அவால் 160 ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாட முடியும். தற்போதுள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தாலும், சுப்மன் கில் போன்ற நங்கூரமிடக்கூடிய மற்றும் கியர்களை மாற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியம். அதனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆசிய கோப்பை 2025 அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now