
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹதராபாத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் (பிப்.02) நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.