
வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில், இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்தவகையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.