
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இதனையடுத்து இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிவரும் அக்டோபர் 06ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரானது குவாலியர், டெல்லி மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தும் நிலையில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திர் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. மேற்கொண்டு மயங்க் யாதவ், ஹர்ஷித் ராஜான் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.