ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று குயின்ஸ்லாந்து ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாஅகிஸ்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கான் மற்றும் தையப் தாஹிர் தலா 39 ரன்கள் எடுத்தனர். இர்ஃபான் கான் 27 ரன்கள் எடுத்தார்.ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா, ந்ங்கராவா, மஸகட்சா மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 15.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் மற்றும் சுஃபியன் முகீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தயாப் தாஹிர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.