
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களைச் சேர்த்த நிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறி அசத்தியுள்ளது. அரையிறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.