கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் வரும் 10ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன.ஆடவா் கிரிக்கெட் போட்டிகளைப் போல் மகளிா் கிரிக்கெட்டும் தற்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. 14 ஆண்டுகளாக மகளிா் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கையும், குரூப் 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
Trending
நியூலேண்ட்ஸ் கேப் டவுன், பாா்ல் போலண்ட் பாா்க், ஜெபா்ஹா செயின்ட் ஜாா்ஜ் பாா்க் ஆகிய மைதானங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “ஆடுகளத்தில் தோனி எவ்வளவு புத்திசாலி என அனைவருக்கும் தெரியும். இப்போதும்கூட தோனியின் பழைய விடியோக்களை பார்க்கும்போது கற்றுக்கொள்ள இப்போதும் நிறைய உள்ளது. கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சிறிய விஷயங்களின் மீது கவனம் செலுத்துகிறேன்.
அது அணிக்கு களத்தில் மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கேப்டன்சி என்று சொல்லும்போது கங்குலி, தோனியின் பாதிப்பு என்னுடைய வாழ்க்கையில் உள்ளது. அவர்கள் அணியை வழிநடத்தியது போல எனக்கும் நடந்த வழிநடந்த ஆசை. கங்குலி இந்திய அணியை வழிநடத்தும்போது ஆடவர் அணி வளர்ச்சியடைந்தது. டிரெஸ்ஸிங் ரூமில் அவர்ந் நடந்துக்கொண்ட விதமும் அவர் வீரர்களை நம்பிய விதமும் மிகவும் பிடிந்திருந்தது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now