-mdl.jpg)
Harmanpreet Kaur Records: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் சமன்செய்துள்ளார். முன்னதாக மிதாலி ராஜ் 7 சதங்களை அடித்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுரும் 7 சதங்களை விளாசி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.