இங்கிலாந்தின் புதிய ஒருநாள், டி20 கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் ஜோ ரூட், ஹாரு புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் இருந்தனர்.
Trending
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸும், டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக்கும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனுக்கான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹாரி புரூக், “இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாகும். நான் வார்ஃபெடேலில் உள்ள பர்லியில் கிரிக்கெட் விளையாடிய சிறு வயதிலிருந்தே, யார்க்ஷயரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், இங்கிலாந்துக்காக விளையாட வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் ஒருநாள் அணியை வழிநடத்த வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இதுவரை என்னுடன் இருந்து எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்தினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலையில் இருக்க முடியாது. இந்த நாட்டில் ஏராளமான திறமையாளர்கள் உள்ளனர். அதனால் நான் தொடங்குவதற்கும், என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பதற்கும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான ஹாரி ப்ரூக் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2281 ரன்களையும், 26 ஒருநாள் போட்டிகளில் 816 ரன்களையும், 44 டி20 போட்டிகளில் 798 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் தலைமையில் இங்கிலாந்து அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now